districts

img

நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்.21- கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து சிபி சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இப்பள்ளியில் ஏற்கனவே பல மாணவ, மாணவிகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது, இதுகுறித்து செய்தி களை சேகரிக்க நக்கீரன் இதழின் செய்தி யாளர் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டி வந்த  மர்ம கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி யுள்ளது. மேலும். அவர்கள் வந்த காரை  சேதப்படுத்தியதோடு. கேமரா மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்தும். பத்தி ரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும். தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்  பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் கமலகண்ணன் தலைமையேற்றார். துவக்கி வைத்து மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன் றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு. சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி.பாலமுருகன்,  மநீம மாவட்டச் செயலாளர் காளிதாஸ். தமிழ்புலிகள் அமைப்பின் விடியல் வீரப்  பெருமாள், நாம் தமிழர் கட்சியின் செல்வக்  குமார் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். மேலும் இதில், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் செந்த லைக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

;