60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 22) கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை 1 மற்றும் 2 கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளை-1ன் தலைவர் வி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார், சென்னை மண்டல செயலாளர் ஏ.முருகானந்தம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, கிளை-2ன் தலைவர் தண்டபாணி, கிளை செயலாளர்கள் பண்டாரம் பிள்ளை (கிளை 1), கவுதமன் (கிளை 2), மாநில செயற்குழு உறுப்பினர் ஹெலன் தேவ கிருபை உள்ளிட்டோர் பேசினர்.