districts

img

மழை நீரை அகற்ற கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

தூத்துக்குடி,டிச.1 தூத்துக்குடி ஒன்றியப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை சிபிஎம் ஒன்றிய செயலாளர் க.சங்கரன் தலைமையில் மேலஅலங்காரத்தட்டு ஊர் தலைவர் கிருஷ்ணன், 17 வது வார்டு செயலாளர் ஜான்சன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், கண்ணன், மற்றும் மணி, ரவி உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர். இது தொடர்பாக சிபிஎம் ஒன்றிய செயலா ளர் கே.சங்கரன் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மா நகரட்சியில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் வீடுக ளுக்குள் புகுந்துள்ளது. தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட பாலதண்டாயுத‌ நகர், பூப்பாண்டியாபுரம் மற்றும், தூத்துக்குடி மா நகராட்சி வடக்கு மண்டலம் 17 வது வார்டுக் குட்பட்ட‌ மேலஅலங்காரதட்டு, கோவில் பிள்ளைவிளை, பாக்கிய நாதன்விளை, கீழஅலங்காரத்தட்டு, கல்வாரி நகர், அன்னை தெரசா மீனவர் காலனி, பொன் சுப்பையா நகர்  உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 3 அடி அளவிற்கு வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, பல்வேறு வீடுகளில் கழிவுதொட்டிகள் நிறைந்து தண்ணீர் வெளியேறுவதால் பெண் கள் மற்றும் குழந்தைகள் கழிப்பிட வசதி இன்றி பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்,  எனவே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இதுபோன்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும், மழை நீருடன் கழிவு நீர் கலப்பதால் அசுத்தமாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே மழை நீர் அதிகமாக சூழ்ந்துள்ள இடங்களில் கூடுதல் மோட்டார் பம்புகள் கொண்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், வரும் காலங்க ளில் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படாமல் இருக்க வடிகால் வசதி அமைக்க வேண்டும், அதேபோல் மாநகராட்சி நிர்வாகம், மற்றும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.  மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

;