சிபிஎம் தேனி மாவட்டச் செயலாளரின் தாயார் மறைவு தேனி, ஜூலை 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலையின் தாயார் வி.தங்கத் தம்மாள் (100) புதன்கிழமை அதிகாலை காலமானார். இறுதி நிகழ்ச்சி கம்பத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் மாலையில் நடை பெற்றது .கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி ,அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க துணைத் தலைவர் ஏ.லாசர், தீக்கதிர் முதன்மைப் பொதுமேலாளர் என். பாண்டி ,காங்கிரஸ் கட்சி சார்பில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பி னர் அசன் ஆருண் ,மாவட்ட தலைவர் எம்.பி.முருகேசன் ,மதிமுக தேனி மாவட்டச்செயலாளர் விஎஸ்கே.ராமகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு ,புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவி, தேனி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.வெங்கடேசன் ,சி.முருகன் ,டி.கண்ணன், சு.வெண் மணி ,ஜி.எம்.நாகராஜன் ,சி.முனீஸ்வரன் ,கே.ஆர்.லெனின் ,ஆறுமுகம் ,இ.தர்மர் ,மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன் ,எல்.ஆர்.சங்கரசுப்பு ,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.