சின்னாளப்பட்டி, டிச.17- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக் குட்பட்டது 11 வது வார்டு புதுப் பட்டி. இங்கு சுமார் 300 குடும் பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாத தெருக்களில் பொ துக்குழாய் வசதி செய்து கொ டுக்க வேண்டும், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும், தெருக்களில் பேவர் பிளாக் பதிந்து கொடுக்க வேண்டும், அனைத்துத் தெருக்க ளிலும் சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும், துப்புரவுப் பணியாளர்கள் தினசரி தெருக்க ளுக்கு வந்து சாக்கடை மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும், சமுதாயக் கட்டிடம் நூலக வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் எம்.செந்தில்குமார் தலை மையில் நிலக்கோட்டை பேரூ ராட்சி முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மலை வாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் பி.காளியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.குருசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆர்.சச்சி தானந்தம், மாவட்டக் குழு உறுப் பினர்கள் வ.கல்யாணசுந்தரம், எஸ்.ஆர்.செளந்தர்ராஜன் ஆகியோர் பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர் எம்.காசி மாயன், பெரியசாமி, ரவிச்சந்தி ரன், நிலக்கோட்டை கிளைச் செய லாளர் நாகராஜன், புதுப்பட்டி கிளை செயலாளர் ஏ.சேவுகப் பெருமாள், எஸ்.ராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக செயல் அலுவலர் சுந்தரியிடம் மனு அளிக்கப்பட்டது. பேரூ ராட்சி சம்பந்தமான கோரிக்கை களை உடனே நிறைவேற்றுவ தாக செயல் அலுவலர் உறுதி யளித்தார்.