சின்னாளப்பட்டி, ஜூலை 7- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை புதுப்பட்டி யில் அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொ துக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் பெசண்முகம் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே ஆர் பாலாஜி, எஸ்.ஆர். சௌந் தர்ராஜன் ஆகியோர் பேசி னர். மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் காளியப்பன், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் குருசாமி, கிளைச் செயலா ளர்கள் ராஜ் சேவகன், மாலா உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். என்.புதுப்பட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காட்டுநாயக்கன் சாதி சான்றி தழ் வழங்குவதில் ஆன் லைன் முறையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் .மயானத்தை சீரமைத்து தகன மேடை, காத்திருப்போர் அறை, தண்ணீர் வசதி, மின்விளக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பொ துக் குழாய் வசதி அனை த்து தெருக்களிலும் செய்து கொடுக்க வேண்டும். பேவர் பிளாக் தளம், சாக்கடை வசதி, எரியாத மின் விளக் கை சரி செய்ய வேண்டும். உண்டு உறைவிட பள்ளி அமைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. மாணவர்கள் பழங்குடி யின சாதிச்சான்று பெறுவ தில் குளறுபடி மற்றும் தேவையற்ற கால தாமதத் தை கண்டித்து நிலக்கோட் டையில் மறியல் நடைபெறு வதாக மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் அறிவித்தி ருந்தனர்.அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை யின் அடிப்படையில் தற் போது மறியல் கைவிடப் பட்டது.