சிவகங்கை, ஜூலை 11- சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். காளையார் கோவில், நாட்டரசன்கோட்டையை சுற்றுலாத்தலமாக அறிவித்து வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்த அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூலை 11 செவ்வாய்க்கிழமையன்று கொட்டும் மழையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் தென்னரசு தலை மை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், எஸ்.கே. பொன்னுத்தாய்,மாவட்ட செய லாளர் தண்டியப்பன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, கருப் புச்சாமி,முத்துராமலிங்க பூபதி, மோகன்,ஆறுமுகம், மணியம்மா, சேதுராமன், சுரேஷ் மற்றும் மாவட் டக்குழு உறுப்பினர்கள் ,இடைக் கமிட்டி செயலாளர்கள் உள்படதிர ளானோர் கலந்து கொண்டனர் கட்சியின் சிவகங்கை மாவட் டக்குழு சார்பில் 201 தீக்கதிர் சந்தாக் களுக்கான தொகை 6 லட்சத்து30 ஆயிரம் 201 ரூபாயை மாவட்ட செய லாளர் தண்டியப்பன் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனி டம் வழங்கினார்.