districts

img

சின்னமனூரில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தேனி, அக்.20- சின்னமனூரில் அடிப்  படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தேனி மாவட்டம், சின்ன மனூர் நகரில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் ,விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சாக்  கடை வசதி, பாதாள சாக் கடை என அடிப்படை வசதி கள் கேட்டு காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் எஸ் . ஈஸ்வரன், ஆர் .சுந்தர்ராஜன் தலைமை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் டி .வெங்கடேசன் சிறப்புரையாற்றினார் .ஒன்றி யச் செயலாளர் கே.எஸ் ஆறுமுகம்,மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே . கரண்குமார், என் .அம்சமணி , விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எல்,ஆர் சங்கரசுப்பு, நகர்  பொறுப்பாளர் எம் .மணி கண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி .சேகர்,  எஸ்.ஈஸ்வரி, கே .பாண்டி யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.