அருப்புக்கோட்டை, ஜூலை 13- அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத் தம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றி யத்திற்கு உட்பட்டது பால வநத்தம் ஊராட்சி. இங்கு, குடிநீர், சாலை மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இல்லை. எனவே, அடிப்படை வசதி களை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஜோதிபாசு தலைமை யேற்றார். துவக்கி வைத்து ஒன்றிய செயலாளர் எம்.கணேசன் பேசினார். முடி வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக் குமார் உரையாற்றினார். மேலும் இதில், பழனி முரு கன், அண்ணாதுரை, அம் மாசி, முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.