districts

img

மின் கட்டண உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி, செப்.13- ஒன்றிய பாஜக அரசானது, பெட்ரோல், டீசல்  மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினால் பொது மக்கள் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற னர். இந்தநிலையில் தமிழக அரசு, மின் கட்டணத்தை திடீரென உயர்த்தியுள்ளது. இதனால், சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளவார்கள். ஏற்கனவே, மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மேலும், மின்வாரிய அதி காரிகள் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் சிபிஎம் சார்பில் ஆட்சே பணை தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும், தமிழக அரசானது, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனைக் கண்டித்து காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட் டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர் எம்.பரம சிவம் தலைமையேற்றார். துவக்கி வைத்து வட்ட செயலாளர் ஏ.அம்மாசி பேசினார். முடி வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மூத்த தலைவர் ஆறு முகம்,  முகமது அலி ஜின்னா,  சிவபாக்கியம், குமராண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.