மதுரை, செப்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியம் பரவை பேரூராட்சி கிளை கள் சார்பில் சத்திய மூர்த்தி நகரில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் செவ்வாயன்று ஒன் றியக்குழு உறுப்பினர் கே. பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பி னர் சி.மலர்விழி முன்னிலை வகித்தார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன் னுத்தாய், மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகி யோர் பேசினர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்க டேசன் சிறப்புரையாற்றி னார். பொதுக்கூட்டத்தில் ஏரா ளமானோர் பங்கேற்றனர்.