districts

img

36 ஆண்டுகளாக குடியிருக்கும் அண்ணா காலனி மக்களுக்கு பட்டா வழங்குக!

திண்டுக்கல், டிச.13- திண்டுக்கல்லில் 36 ஆண்டு களாக குடியிருக்கும் அண்ணா காலனி மக்களுக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஎம் சார் பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: 1987 ஆம் ஆண்டு கக்கன் நகர் பகுதியில் குடியிருந்த மக்க ளுக்கு அகல ரயில்பாதை அமைக் கும் போது அங்கிருந்த மக்க ளுக்கு ரயில்வே நிர்வாகம் மாற்று இடமாக திண்டுக்கல் நத்தம் சாலையில் இப்போதுள்ள அண்ணா காலனியில் 60 குடும் பங்கள் குடியமர்த்தப்பட்டன. அன்றைய தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகளும் ஒவ் வொரு குடும்பத்திற்கும் தலா 400 சதுர அடி நிலம் ஒதுக்கீடு செய்தனர். இப்பகுதி மக்கள் இங்கு குடியேறி கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் ஆகியும் இந்த வீடு களுக்கு இதுவரை பட்டா வழங் கப்படாத நிலையே உள்ளது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல முறை திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலை யில் இந்த பிரச்சனையில் ரயில்வே நிர்வாகம் தலையீட்டின் பேரிலே பட்டா வழங்க இயலும் என்ற நிலை உள்ளது.  எனவே, ரயில்வே பொது மேலாளர் இந்த பிரச்சனையில் தலையிட்டு 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஆட்சேபணை இல்லை என்ற உத்தரவாதத்தை திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சி யருக்கு பரிந்துரைக்க வேண் டும்.  இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.  கட்சியின் நகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ஆஸாத், எம். ஜானகி, நகர்க் குழு உறுப்பி னர்கள் எஸ்.என்.ஜோதிபாசு, விஷ்ணுவர்த்தன், ராஜேஷ்வரி, வினோத்குமார் (வாலிபர் சங்கம்) ஆகியோர் மனுக் கொடுத்தனர்.

;