districts

img

மதுரை மாநகரில் பூங்கா, சுரங்க நடைபாதை, தார்ச்சாலை, பள்ளி வகுப்பறை, வீடுகள் கட்டித்தருக!

மதுரை, செப்.8-  சட்டமன்றத் தொகுதி நிதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர் சட்டமன்ற உறுப்பி னர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன் வடக்கு பகு திக்குழு செயலாளர்கள் வி.கோட் டைச்சாமி, ஏ. பாலு, தெற்கு பகு திக்குழு செயலாளர் ஜெ.லெனின், மத்திய பகுதிக்குழு செயலாளர்கள் வை.ஸ்டாலின், பி.ஜீவா ஆகியோர் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பி னரும் நிதியமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் கோ. தளபதி, தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மாரியம்மன் தெப்பக் குளத்தை சுற்றி நவீன சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். புதுமாகாளிபட்டி - கீரைத்துறை இணைப்பு ரயில்வே சுரங்க நடை பாதை . அனுப்பானடி - கீழ்மதுரை ரயில்வே சுரங்க நடைபாதை, கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை - மஹால் இணைப்பு சுரங்க நடை பாதை அமைக்க வேண்டும் என்று  சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாத னிடம் மனு அளித்தனர். 

வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  கோ.தளபதியிடம் அளித்த மனுவில், செல்லூர் கண் மாய் கரை பகுதியில் காங்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க  வேண்டும். பந்தல்குடி கால்வாயை தூர்வாரி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், செல்லூரில் இருந்து மீனாம்பாள் புரம் வரை (குலமங்கலம் மெயின் ரோடு) புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பைபாஸ் ரோடு காமராஜர் பாலம் முதல் பி.டி.ஆர் . பாலம் வரை வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஒளி ரும் மின் விளக்குகளை அமைக்க வேண்டும்.  தத்தனேரி மயானத்தை நவீனப்படுத்த வேண்டும்,  மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதார வளாகம் கிழக்கு கோபுரம் கீழ்ப் பகுதியில்  (குளியலறை , கழிப்ப றை) அமைக்க வேண்டும் . மதுரை ரயில் நிலையம் மற்றும் டவுன்ஹால் ரோடு இணைப்பு நடை சுரங்கப்பாதை அல்லது எக்ஸ்லேட் டர் அமைக்க  வேண்டும் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனிடம்   மனு அளிக்கப்பட்டது.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட கிருதுமால் நதி வாய்க்காலை சுத்தம் செய்து கான்கிரீட் மூடிகள் அமைக்க வேண்டும்,  வில்லாபுரம் ஹவுசிங் போர்டு - ராமையா தெரு இணை ப்பு பகுதியில் விளையாட்டு மைதா னம் அமைக்க  வேண்டும்.  ஜெய் ஹிந்துபுரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு அடக்கஸ்தலம், கல்லறை தோட்டம் அமைத்துக் கொடுக்க  வேண்டும் என்று வலி யுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு விடம்  மனு அளிக்கப்பட உள்ளது.  மேலும் இந்த நான்கு தொகு திகளில்  குளங்களை தூர்வாரி நீரை தேக்கி சுற்றுப்புறத்தில் பூங்கா அமைக்க வேண்டும்.  மாநக ராட்சி மற்றும் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் , ஆய்வ கம், நூலகம் அமைக்க வேண்டும், தொகுதிக்கு உட்பட்ட  மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வாழும் பகுதியில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று மனு அளித்துள்ள னர்.

;