தேனி ,செப்.30- உத்தமபாளையம் அருகே பண்ணைபுரத்தில் பொது சுகாதார வளாகத்தில் இருந்த கழிவு நீர் சேமிப்பு தொட்டி உடைந்து இறந்த சிறுமிகளின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் . பண்ணைப்புரம் பாவலர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிதிகா ஸ்ரீ ( 7) மற்றும் மேற்கு தெரு ஜெகதீஷ் மகள் சுபஸ்ரீ (6). இருவரும் அங்குள்ள இந்து நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் வியாழன்று மாலை யில் பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு சொந்தமான பெண்கள் சுகாதார வளாகம் அருகே உள்ள கழிவு நீர் தொட்டி மேல் விளையாடிக் கொண்டிருந்தபோது கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்ததில் உள்ளே விழுந்து சிறுமி இருவரும் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு சென்றனர் . வெள்ளிக்கிழமை உடற்கூராய்வுக்குப் பின் சிறுமியின் உடல்கள் உறவினர்கள் வசம் ஒப்ப டைக்கப்பட்டது .சிறுமிகளின் உடலுக்கு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினரும் பண்ணைபுரம் பேரூராட்சி துணைத் தலைவருமான எஸ்.சுருளிவேல் ,தேவாரம் ஏரியா செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர் .
ரூ. 10 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்குக
பின்னர் செய்தியாளார்களிடம் மாவட்ட செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை கூறுகையில், இரு சிறுமி கள் இறப்புக்கு காரணமான பண்ணைப்புரம் பேரூ ராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் மாவட்டம் முழுவதும் இது போன்ற மரண இழப்புக்கள் வராமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவார ணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றார் .
தற்காலிக பணி நீக்கம்
இச்சம்பவத்தை தொடர்ந்து பண்ணைப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி ,இள நிலை பொறியாளர் வீரமணி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டுள்ளார் .