districts

img

தோழர் பி.தேவராஜ் உடலுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

திண்டுக்கல், ஜுலை 12- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் எரியோட்டில் செவ்வாயன்று கால மான தோழர் பி.தேவராஜ் உடலுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  தோழர். பி.தேவராஜ் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேடசந்தூர் தாலு காக்குழு ஸ்தாபக தலைவர்களுள் ஒருவ ராக திகழ்ந்தவர். அப்பகுதியில் விவசா யத் தொழிலாளர் சங்கத்தை கட்டுவதில் முன்னிலை வகித்தவர். உடல்நலமின்றி இருந்த அவர் செவ்வாயன்று காலமானர். அவரது மறைவு செய்தியறிந்து மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்  குழு உறுப்பினர்  கே.பாலபாரதி,  மாநி லக்குழு உறுப்பினர் என்.பாண்டி, திண்டுக்  கல் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதா னந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பி னர்கள் பி.செல்வராஜ், டி.முத்துச்சாமி, கே. அருள்செல்வன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள்,   ஒன்றியச்செயலாளர்கள்  மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.