districts

ஆவியூரில் தீண்டாமைக் கொடுமைகளைக் களைய சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூலை 10- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, ஆவியூர் கிராமத்தில் உள்ள தீண்டாமைக் கொடுமைகளை களைய வலியுறுத்தியும் இந்தப் பிரச்சனையில  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமெனவும்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளது ஆவியூர் கிராமம். இங்கு  பட்டியலின அருந்ததியர் சமூக மக்கள்  சுமார் 100 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இம்மக்களுக்கு பாத்தியப்பட்ட  காளியம்மன் கோவில் திருவிழா ஜூன் 9,  10 தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது. அதில், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவிருந்தது. இதுவரை  இக்கோவிலுக்கு முளைப் பாரி கரைத்தல் என்ற ஒரு நிகழ்வு நடை பெறவில்லை. எனவே, புதிதாக ஒரு நடை முறையை ஏற்படுத்தக் கூடாது என ஆவி யூரில் உள்ள சாதி ஆதிக்க சக்தியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவர்களின் எதிர்ப்பின் காரணமாக அருந்ததியர் மக்கள் முளைப்பாரி ஊர்வலம் செல்ல பாதுகாப்புக் கேட்டு ஜூன்.2- இல் காரியா பட்டி காவல் துறையினரிடம் மனுச் செய் துள்ளனர். ஆனால் காரியாபட்டி காவல்துறை யினரோ, சட்டம் -ஒழுங்கு பிரச்சனை யைக் காரணம் காட்டி முளைப்பாரி ஊர் வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளார்.  மேலும், காளியம்மன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் முளைப்பாரியைக் கரைக்க  வேண்டுமென கட்டாயப்படுத்தி யுள்ளனர்.

 காரியாபட்டி காவல்துறையினரின் இச்செயல்  வன்கொடுமைக்கு துணை போவதாக இருந்துள்ளது. இது குறித்து  தலித்  மக்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர். இதையடுத்து,  அவர்களுக்கு டீக்கடையில், ஹோட்ட லில், மளிகைக் கடையில் பால், குடிநீர் உட்பட எந்தவித அத்தியாவசியப் பொருட்களும் வழங்கக் கூடாது என சாதி ஆதிக்க சக்திகள்  தடை விதித்து சமூக பகிஷ்காரம் செய்துள்ளனர். பின்னர்  மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்ட பின்பு,  வட்டாட்சியர் தலையீடு செய்து அருந்ததியர் மக்களுக்கு கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை,  ஆவியூர் கிராமத்தில்  அருந்ததியர் மக்களுக்கு டீக்கடைகளில்  இரட்டைக் குவளை முறை, ஹோட்டல் களில் சேர்களில் அமர்ந்து சாப்பிடத் தடை, சலூன்களில் முடிவெட்டத் தடை, சில தெருக்களுக்குள் செருப்பணிந்து செல்லத் தடை, பூப்புனித நீராட்டு விழா போன்ற விஷேஷங்களின் போது மேள தாளம் ஊர்வலத்திற்கு தடை எனப் பல்வேறு வகையான தீண்டாமைக் கொடு மைகள் உள்ளதாக தலித் மக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

 தீண்டாமைக் கொடுமைகளை அகற்ற வேண்டுமென ஆவியூரைச் சேர்ந்த பூபாண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவ் வழக்கை விசாரித்த நீதிபதி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்  நான்கு  வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட நிர்வாகம், ஆவி யூரில் உள்ள தலித் மக்களுக்கு உரிய  பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வ தோடு, அங்கு நிலவி வரும் தீண்டாமைக்  கொடுமைகள் பற்றி நியாயமான முறை யில் ஆய்வு செய்து உடனடியாக அதைக் களையும் வகையில் நீதிமன்றத்தில் உண்மைத் தன்மையுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. கனிம வளக் கொள்ளை விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் கனிம வளக் கொள்ளை நடை பெற்று வருகிறது. குறிப்பாக திருவில்லி புத்தூர் ஒன்றியம் அச்சம்தவிர்த்தான் விவ சாயிகள் மற்றும் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் தனியார் கல்குவாரி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள புலியூரான் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிக்குண்டு கண்மாயில் நீதிமன்ற  உத்தரவை மீறி சாலை அமைத்து அதில் தனியார் கல்குவாரி நிறுவனத்தினர் தொடர்ந்து கனரக வாகனங்களை இயக்கி  வருகின்றனர். இதை எதிர்த்து பலகட்டப்  போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதியைச்  சேர்ந்த பொது மக்கள் நடத்தி வருகின்றனர். சிவகாசி ஒன்றியம், பி.பாறைப்பட்டி யில் விளை நிலங்களுக்கு நடுவே கல் குவாரி அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் கல்குவாரியை நிறுத்த உத்தர விட்டது. அதையும் மீறி மீண்டும் கல்  குவாரியை இயக்க முயற்சி நடைபெற்றது.  இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி னர். ஆனால், காவல்துறை போராட்டம் நடத்திய ஆறு பேர் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் நீதிமன்ற உத்தரவுகளையும்,  விதிமுறைகளையும் மீறி கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதை  எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள்  போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கா மல், தனியார் கல்குவாரி நிறுவனத்தின ருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.  தமிழக அரசு,  விருதுநகர் மாவட்டத் தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், மக்க ளின் கோரிக்கையை நிறைவேற்றவும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.