திருவில்லிபுத்தூர்,மே 26- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் ஒன்றியம் மம்சாபுரம் பேரூராட்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின விழா ,கட்சி நிதி அளிப்பு விழா, பத்தாம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு களில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாண வியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன. பிள்ளையார் கோவில் திடல் அருகில் நடைபெற்ற விழாவிற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் டி.பெருமாள் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிகுமார் ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் கே. அர்ஜுனன் சிறப்புரையாற்றினார். 10 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தின் சார்பில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் அர்ஜுணனிடம் ஒன்றியச் செயலாளர் சசிகுமார் வழங்கினார். விழாவில் மாவட்டக் குழு உறுப்பினர் திருமலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, இருளப்பன் மற்றும் மாரியப்பன், ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.