districts

img

குடும்ப வன்முறைக்கு எதிராக சிபிஎம் பிரச்சாரம்

தேனி ,ஆக.5- பெரியகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் குடும்ப வன்முறை  எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை  முன்னி ட்டு துண்டறிக்கை விநியோகம் செய்யப் பட்டது. பெரியகுளத்தில் அரசு  பெண்கள் கலைக் கல்லூரி மாணவிகளிடம்  துண்டறிக்கை விநி யோகம் செய்யப்பட்டது. இதில்  கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். வெண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

சாத்தூரில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.விஜயகுமார் தலைமையிலும், விருது நகரில் நகர் செயலாளர் எல்.முருகன் தலை மையிலும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  விருதுநகர் வடக்கு ஒன்றியம் சார்பில் தனியார் கல்லூரி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கார்மேகம், உட்பட பலர் பங்கேற்றனர்.  மதுரை மாநகர் மத்திய  2ஆம் பகுதி மாதர் சிம்மக்கல் கட்சி கிளைகள் சார்பில்  வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் நடை பெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.கல்பனா மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.