districts

img

பல்வேறு அமைப்பினர் மரியாதை

மதுரை, அக்.2- மகாத்மா காந்தி அவர்களின் 154 ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பு கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு உறுப்  பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரு மான சு.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் இரா. விஜயராஜன், எஸ். பாலா, மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், மாவட்  டக்குழு உறுப்பினரும் மாநகராட்சி துணை மேயருமான டி. நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. அலாவுதீன் உள்ளிட்ட பலர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மாலை அணி வித்தனர். தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை  மேடை சார்பில் மாநில தலைவர் அருணன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் என். ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர்  மாலை அணிவித்து மக்கள் ஒற்றுமை, மதச்  சார்பின்மையை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநிலப் பொருளாளர் பாரதி, மாவட்டத் தலைவர் எஸ். சரண், செயலாளர் டி. செல்வா மற்றும் நிர்வா கிகள் கலந்துகொண்டனர். மகாத்மா காந்தி நினைவிடத்தில் சுதந்தி ரப்போராட்ட தியாகிகளுடன் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், துணை மேயர் டி. நாகராஜன் ஆகியோர் மலர்  தூவி மரியாதை செலுத்தினர். 

மதுரை ரயில் நிலையத்தில் விழா

மகாத்மா காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு  மதுரைக்கு ரயில் மூலம் வருகை புரிந்தார். அதை நினைவு கூரும் வகையில் ரயில்  நிலையத்தில் “காந்தி கார்னர்” நினைவுச் சின்னம் அருகே அவரது உருவப்படத்திற்கு கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உட்பட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காந்தி வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட 100 புகைப்படங்கள் கொண்ட கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார். 

வன்னிவேலம்பட்டி

மதுரை புறநகர் மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியம் வன்னிவேலம்பட்டி கிராமத்தில் பாலர் பூங்கா சார்பில் சிறுவர்கள் காந்தி உருவப்படத்தை முகமூடி அணிந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாலர் பூங்கா பொறுப்பாளர் எம்.கண்ணன் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. 

தேனி 

தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் காந்தி சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து உறுதி ஏற்கப்பட்டது . கட்சியின் தேனி மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உரு வப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், சி.முருகன்  உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கம்பத்தில் காந்தி சிலைக்கு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின், மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர்வேல் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேசிய மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் போடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்தி யின் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர் .மூத்த தலை வர்கள் கே.ராஜப்பன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் உள்  ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கோம்பை, பெரியகுளத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ். வெண்மணி,எம். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாலிபர் சங்கம் 

“ஜனநாயகத்தை பாதுகாப்போம், மதச் சார்பின்மையை பாதுகாப்போம், பாசி சத்தை வேரறுப்போம்” என்ற முழக்கத்துடன் மகாத்மா காந்தி அடிகள் உருவச்சிலைக்கு  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேனி மாவட்டக் குழு சார்பாக மாலை அணிவித்து  மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் கரன்குமர், செயலாளர் சி. முனீஸ்வரன், பொருளாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாற்றுத் திறனாளிகள்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை களுக்கான சங்கத்தின் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா குன்னூரில் அவது  சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. குன்னூர் தலைவர் பழனி ஜெப ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் நாகராஜ். ஒன்றிய செயலாளர் கணே சன், மாவட்ட துணைத் தலைவர் அய்யக்  காள், மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் காந்தியின் உருவச் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக மாவட்டத்தலைவர் அரபுமுகமது, மாவட்டச்செயலாளர் வ.கல்யாணசுந்தரம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆஸாத், மாநிலக்குழு உறுப்பினர் சூசைமேரி, சிபிஎம் மாமன்ற கவுன்சிலர் மாரியம்மாள் ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணி வித்து உறுதி மொழி ஏற்றனர். இந்திய மக்க ளுக்கான இயக்கம் சார்பாகவும் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இராஜபாளையம்

இராஜபாளையத்தில் உள்ள காந்தி சிலைக்கு சிபிஎம் நகரச் செயலாளர் மாரி யப்பன் தலைமையில் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சமூக நல்லிணக்க உறுதி மொழி ஏற்றனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் எல்ஐசியில் இந்தியா வுக்கான மக்கள் இயக்கம் சார்பாக மக்கள்  ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சீனியர் மேலாளர் லட்சு மணன், உதவி கிளை மேலாளர் சிவ குமார், லிகாய் முகவர் அமைப்பின் பொருளா ளர் மூர்த்தி, காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க  செயலாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட  முகவர்களும் ,எல்.ஐ.சி ஊழியர்களும் திர ளாக கலந்துகொண்டு உறுதிமொழியேற்ற னர். 

பரமக்குடி

காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் பர மக்குடி கிளையின் சார்பாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. சங்கத்தின் செயலாளர் சி தனபாலன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் எம்  அண்ணாத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்கம் சார்பில் முருகேசன் அய்யா அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌர விக்கப்பட்டது. பின்னர் மக்கள் ஒற்றுமை உறுதிமொழியேற்றனர்.