districts

img

திண்டுக்கல் மாவட்டத்தில் பருத்தி விலை படுவீழ்ச்சி

திண்டுக்கல், ஜுலை 9- திண்டுக்கல் மாவட்டத்தில் பருத்தி விலை படு வீழ்ச்சியடைந்துள்ளது. இத னால் பல ஆயிரம் டன் பருத்தி மூட்டை கள் தேக்கமடைந்துள்ளன.  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம் பகுதிகளான ஸ்ரீ ராமாபுரம், கதிரையன்குளம், மயி லாப்பூர், கசவனம்பட்டி, அம்மாபட்டி, இகாமாட்சிபுரம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பருத்தி வியாபாரிகளும், நூற்பாலை நிர்வாகத்தினரும் விவசாயிகளிடம் நேரடியாக சென்று பருத்தியை கொள்  முதல் செய்ததால் பருத்தி கிலோ ரூ. 120 முதல் 130 வரை விற்கப்பட்டது. அத னால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த னர்.  இந்த ஆண்டு அதிக அளவில் பருத்தி சாகுபடி நடந்துள்ளது. கடந்த மழைக்காலங்களில் பருத்தியும் அமோக விளைச்சல் அடைந்தது. அறு வடை செய்து வைக்கும் தருவாயில் இந்த ஆண்டு வியாபாரிகளோ, நூற்  பாலை நிறுவனங்களோ விவசாயி களிடம் கொள்முதல் செய்ய வர வில்லை. இதனால் விலை திடீரென ரூ.60 முதல் 80 -க்கு குறைந்தது. இத னால் விவசாயிகள் பெரிய அளவில்  நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்த னர். பருத்தி காட்டில் பஞ்செடுக்க ஒரு  நபருக்கு கூலியாக ரூ.300 மட்டும் டீ,  வடை செலவுடன் ரூ.400 வரை செல வாகிறது.  விலை குறைந்ததால் கூலி கூட கொடுக்க முடியாத நிலையில் தங்கள் நிலங்களில் தாங்களே பருத்தி எடுக் கும் நிலை உருவாகியுள்ளதாக அப் பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். ரூ.40 முதல் 50 ரூபாய்க்கு விலை  போனாலும் வாங்குவதற்கு வியாபாரி களோ, நூற்பாலைகளோ வராததால் தங்கள் இல்லங்களில் பஞ்சு மூட்டை கள் டன் கணக்கில் தேக்கி வைத்துள்ள னர். 

அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

விவசாயிகள் தங்கள் நகை மற்றும் நிலத்தை அடமானம் வைத்து கடனை வாங்கி பருத்தி விவசாயம் செய்தும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்ப தாகவும் தெரிவித்தனர். பஞ்சு கிலோ வுக்கு 100 ரூபாய் என அரசு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே பருத்தி வேளாண் செய்த விவசாயிகள் தப்பிக்க முடியும் என தெரிவித்தனர். மேலும் பருத்தி விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பருத்தியை ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டன் முதல் 10 டன் வரை தேக்கி வைத்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த பகுதியில் 1000 டன்  பருத்தி விற்பனையாகாமல் தேங்கி யுள்ளன.  இம்மூட்டைகள் வெளியேறி னால்தான் தாங்கள் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் வேதனைப்பட தெரி வித்தனர். மற்ற வேளாண் பொருட் களை அரசே கொள்முதல் செய்வது போல பருத்தி பஞ்சையும் அரசு கொள்  முதல் செய்ய வேண்டும் என பருத்தி  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.