ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.தனலட்சுமி தலைமையிலான சென்னை மண்டல நடைபயண பிரச்சாரக்குழு திங்களன்று (மே 22) மத்தியசென்னையில் பிரச்சாரத்தை தொடங்கியது. இந்த பிரச்சாரத்தை வில்லிவாக்கத்தில் மூத்த தொழிற்சங்கத் தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் தொடங்கி வைத்தார்.