districts

img

திருச்சி, தஞ்சாவூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் மறியல்

திருச்சிராப்பள்ளி, டிச,2- பெட்ரோல், டீசல் விலை யைக் குறைக்க வேண்டும். கட்டு மானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். நல வாரியங்களை சீரழிக்கக் கூடாது. கட்டுமான தொழிலாளர்கள் பண பயன் கள் பெறுவதற்கு தொழிலாளர்க ளின் பங்களிப்பை கட்டாயப் படுத்தும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். சேம நலநிதியை கட்டுமானத்  தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே பயன் படுத்த வேண்டும் இயற்கை மர ணத்திற்கு ரூ 2 லட்சம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கண் காணிப்புக் குழுக் கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். மழைக்கால நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  திருச்சிராப்பள்ளியில் சிஐடியு மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்டக் குழு சார்பில் வியாழனன்று சிங்காரத்தோப்பு பூம்புகார் அருகே சாலை மறியல் நடை பெற்றது.  

கட்டுமான சங்க மாவட்ட தலைவர் வி. கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், கட்டுமானச் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், உலகநாதன், எம்.எஸ். சேது, வெள்ளைச்சாமி, முருகன், வெங்கடேசன், குண சேகரன், கல்யாணி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்டுமான தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செய லாளர் சி.ஜெயபால்  மாநிலக்குழு  உறுப்பினர்கள் பி.என்.பேர் நீதி ஆழ்வார், கே.கல்யாணி, கே.அன்பு, எஸ்.செங்குட்டுவன், எஸ்.மில்லர் பிரபு, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராமிங்கம், மணிமாறன், மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கோவிந்தராஜ், லெட்சு மணன், தங்கையன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்க ளை காவல்துறையினர் கைது செய்தனர்.

;