கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து பலி
தேனி, ஜூலை 3- போடி அருகே திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து இறந்தது குறித்து காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர். போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி மூன்றாவது தெரு வைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் பாண்டி (45). இவர் திங்கள் கிழமை வழக்கம்போல் போடி ரெங்கநாதபுரம் இந்திரா நகரில் உள்ள ராமநாதன் என்பவரது வீட்டில் கட்டட வேலைக்குச் சென்றுள்ளார். வேலை செய்யும்போது மாடிப்படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை அங்கி ருந்தவர்கள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்குச் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி பாண்டி இறந்தார். பாண்டியின் தந்தை தங்கவேல் (72) கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவலர்களை வெட்ட முயற்சி
தேனி, ஜூலை 3- பெரியகுளத்தில் விசாரணைக்குச் சென்ற காவ லர்களை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவத்தில் ஒரு வரைக் கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய வரைத் தேடி வருகிறார்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14-ஆவது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள தோட்டி காலனிப் பகுதியைச் சேர்ந்த பிரபா கர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகி யோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப் படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படை யில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன், தினேஷ் என்ற இரு காவலர்கள் சம்பவம் இடத்திற்குச் சென்றனர். அங்கு தீபக் ரவிச்சந்திரன், காம ராஜ் ஆகிய இருவரும் காவலர்களை நோக்கி யாரி டம் அனுமதி கேட்டு எங்களது தெருப் பகுதிக்குள் வந்தீர் கள் என அவர்களின் சட்டையைப் பிடித்து கேட்டு, உங்கள் மீது சாதிப் பெயரைச் சொல்லித் திட்டினீர்கள் என்று வழக்குத் தொடுப்பேன் என மிரட்டியுள்ளனர். இதனை எதிர்பாராத காவலர்கள் உடனடியாக அலைப்பேசியில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளனர். அப்பொழுது அந்த இருவரும் காவலர்களைத் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள னர். ஒரு கட்டத்தில் காமராஜ் அவரது இருசக்கர வாக னத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து காவல்துறை யினரைப் பார்த்து ஓங்கி வெட்டினால் தலை துண்டாகப் போய்விடும் என மிரட்டியுள்ளார். அங்கிருந்த சிலர் காமராஜைத் தடுத்து நிறுத்திய தோடு, காவலர்களை அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இந்தத் தகவலறிந்த தென்கரை காவல் ஆய்வா ளர் ஜோதி பாபு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீபக் ரவிச்சந்திரன் என்ற இளைஞரைக் கைது செய்தனர். தப்பி ஓடிய காமராஜைத் தேடி வருகின்றனர்.
ஜூலை 10 முதல் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் விருதுநகர் ஆட்சியர் தகவல்
விருதுநகர், ஜூலை 3- ஜூலை 10-ஆம் தேதி சிறுபான்மையின மக்களுக்குக் கடன் வழங்கும் முகாம் வட்டார அளவில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கிறிஸ்தவர், இஸ்லாமியர், பௌத்தர், சமணர், பார்சி மற்றும் சீக்கிய மதத்தைச் சார்ந்த பொருளா தாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோர் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டி ருக்கும் தொழிலை விரிவுபடுத்தவும், தமிழ்நாடு சிறு பான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறு வணிகக்கடன், கல்விக்கடன் கறவை மாட்டுக்கடன் மற்றும் ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதற்கான வட்டார அளவில் கடன் வழங்கும் முகாம் ஜூலை 10- விருதுநகர் வட்டாட்சியர் அலுவல கம், ஜூலை 11- காரியாபட்டி, ஜூலை 12- அருப்புக் கோட்டை, ஜூலை 13- திருச்சுழி, ஜூலை 14- சிவகாசி, ஜூலை 17- இராஜபாளையம், ஜூலை 18- திருவில்லி புத்தூர், ஜூலை 19- சாத்தூர், ஜூலை 20- வெம்பக் கோட்டை, ஜூலை 21- வத்ராயிருப்பு வட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெறுகிறது. கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற உரிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம்.
ஆட்சியரிடம் பதவி விலகல் கடிதம் அளித்த ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
மதுரை, ஜூலை 3- மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சித் தலைவராக ஜெயந்தி பொறுப்பு வகித்து வருகிறார். கோவிலாங்குளம் ஊராட்சிப் பகுதி களில் நடைபெறும் 100 நாள் வேலை , சாலை அமைத்தல் உள்ளிட்ட அரசுத் திட்டப் பணி களில் முறைகேடுகள் நடைபெறுவதாக வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் 1-ஆவது வார்டு உறுப்பி னர் தனம், 2-ஆவது வார்டு உறுப்பினர் ஜெய லட்சுமி, 3-ஆவது வார்டு உறுப்பினர் ஜெயக் கொடி, 4-ஆவது வார்டு உறுப்பினர் பஞ்சு, 9-ஆவது வார்டு உறுப்பினர் தங்கசாமி, 12 -ஆவது வார்டு உறுப்பினர் பாண்டியராஜன் ஆகியோர் திங்களன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கூறி அதற்கான கடிதத்தை ஆட்சியர் சங்கீதாவிடம் திங்களன்று அளித்தனர். மனுவின் மீது மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஊராட்சியில் நடைபெறும் முறைகேடு குறித்தும், முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி செயலாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனப் பேசியதால், தங்களைத் தகுதி நீக்கம் செய்வதாக ஊராட்சித் தலைவரின் கணவரும் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவருமான முத்துராமன் மிரட்டு கிறார் என்றனர்.
மணல் கடத்தல் தடுக்கப்படுமா?
சிவகங்கை, ஜூலை 3- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலு வாகவில் உள்ளது நலலேந்தல் கிராமம். இங்குள்ள பெரிய கண்மாய் வரத்துக்கால்வாயில் தினம்தோறும் மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதைத் தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ், கிளைச் செயலாளர் கர்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் ராஜாங் கம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “வரத்துக்கால்வாயில் மணல் அள்ளுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. காய்கறி விவசாயம் பாதிக்கிறது. கிராம நலன் கருதி மணல் திருட்டைத் தடுத்த நிறுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றனர்”.
குராயூரில் தாமதமாகும் திட்டப் பணி
கள்ளிக்குடி, ஜூலை 3- மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா வில் உள்ளது குராயூர். இங்குள்ள ஐந்தா வது, ஆறாவது வார்டு மக்கள் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் நடைபெறவில்லை என தங்களது கவலையை வெளிப்படுத்தி னர். திங்களன்று குராயூர் கிராமத்திற்குச் சென்றபோது ஐந்தாவது வார்டு உறுப்பி னர் பிலாவடியன் கூறியதாவது: நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளரும் கூட. ஐந்தாவது மற்றும் ஆறா வது வார்டில் எதிர்பார்த்த அளவிற்கு பணி கள் நடைபெறவில்லை. எனக்குத் தெரிந்து ஐந்தாவது வார்டில் வாய்க்கால் கட்ட ரூ.8 லட்சம் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. ஒன்றரை வருடங்கள் ஆகியும் பணி நடைபெறவில்லை. இதற்கி டையில் திட்ட அலுவலர் எங்கள் கிரா மத்திற்கு வந்திருந்தபோது, இது குறித்துக் கூறியதோடு ஐந்தாவது, ஆறாவது வார்டில் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கின்ற னர். பேவர் பிளாக் சாலையையும் இந்தப் பணியோடு சேர்த்துச் செய்து கொடுங்கள் என்றோம். அவரும் அதிகாரிகளை கலந்தா லோசித்து சாலை அமைப்பதற்குச் செலவா கும் தொகை குறித்து தனியாக உரிய முறை யில் அனுப்புங்கள். இந்தப் பணியையும் நிறைவேற்றவேண்டுமென அதிகாரிகளி டம் தெரிவித்தார். திட்ட அலுவலர் கூறியும் கால்வாய் கட் டும் பணி நடைபெறவில்லை. இது குறித்து கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அலுவல ரைச் சந்தித்துப் பேசியபோது, அவர் அளித்த பதில் நெருடலாக இருந்தது என்றார். இது குறித்து திங்களன்று திட்ட அலுவ லரைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.
தினமும் பள்ளிக்கு நான்கு கி.மீ., நடந்து செல்லும் மாணவிகள்
மதுரை, ஜூலை 3- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல் லானி அருகே வெள்ள மரிச்சுகட்டி கிரா மத்தைச் சேர்ந்த மாணவிகள் தாங்கள் தினம் தோறும் நான்கு கி.மீ., பள்ளிக்கு நடந்து செல்கிறோம். எங்களுக்குப் பேருந்து வசதி செய்து தர வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பெற்றோர்கள் சிலருடன் வந்திருந்த மாணவ, மாணவியர் கூறியதாவது:- ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள அரசுப் பள்ளி, எங்கள் கிராமத்திலிருந்து, நான்கு கி.மீ., தொலைவில் திரு உத்திரகோச மங்கையில் உள்ளது. “இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இல்லை. நாங்கள், தின மும் நடந்து செல்வதால் சோர்வு ஏற்படு கிறது. பல பகுதிகளில் இருபுறமும் அடர்ந்த கருவேல் மரங்கள் உள்ளன. எங்களுக்காக பேருந்துகள் இயக்க ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டுமென்றனர். ஜெயதர்ஷினி என்ற மாணவி கூறு கையில், “எங்கள் கிராமத்திலிருந்து சுமார் 35 மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வந்தால், சிரமமின்றி பள்ளிக்குச் செல்வோம்” என்றார். இராமநாதபுரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு வெள்ள மரிச்சுகட்டிக்கு வரும் பேருந்தை திரு உத்திரகோசமங்கை வரை நீட்டித்தால் பிள்ளைகள் நடந்து செல்ல மாட்டார்கள் என்றார் மாணவியின் பெற்றோர் ஒருவர். மேலும், ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டத்திலிருந்து காவிரி நீர் பெறுவதில் எங்கள் கிராமத்தில் சிக்கல் உள்ளது. நீர் ஆதாரம் இருந்தும், தண்ணீர் அசுத்தமாக உள்ளது. நாங்கள் தண்ணீரைச் சூடாக்கிக் குடிக்கிறோம். சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்றார்.
நரிக்குறவர் சமூக மக்களுக்கு வீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
தேனி, ஜூலை 3- தேனியில் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தமிழ்ப் புலிகள் கட்சியினர் முற்றுகையிட்டனர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட 110 குடியிருப்பில் நரிக்குறவர் சமு தாய மக்களுக்குத் தடையின்றி வீடுகள் வழங்க வேண்டும். வீடுகள் வழங்க இடையூறாக இருப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள், குழந்தைகளுடன் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி விட்டுச் சென்றனர்.
மருத்துவர் வீட்டில் தொடர் திருட்டு
மதுரை, ஜூலை 3- மதுரையில் ஓட்டுநர் ஒருவர் தாம் பணியாற்றிய மருத்து வர் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடிவந்துள்ளார். கடைசியில் சிசிடிவி கேமிராவின் மூலம் சிக்கிக் கொண்டார். மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வசிப்பவர் நாராய ணன் (74) ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். இவரது வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தத்தநேரி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன்(48) ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், மருத்துவர் வீட்டிலிருந்த 21 சவரன் நகைகள் திடீரென மாயமானது. இது தொடர்பாக வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஓட்டுநர் மருத்துவர் வீட்டிலிருந்து 21 சவரன் நகையை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இது தொடர்பாக நாராயணன் எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஓட்டுநர் ஜெயராமனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் அவர், பல மாதங்களாகச் சிறிது சிறிதாக நகையைத் திருடியதை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
போடியில் நகை பறிப்பு
தேனி, ஜூலை 3- போடியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகையைப் பறித்துச் சென்ற நபர்களை போடி காவல்துறையினர் தேடி வருகின்றனர். சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பேச்சி யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி பெருமாயி (57). இவரது மகள் முத்துலட்சுமி யை போடி தென்றல் நகரில் திருமணம் செய்து கொடுத்துள் ளார். முத்துலட்சுமி போடியில் துணிக்கடை வைத்துள்ளார். மகளைப் பார்க்க வந்த பெருமாயி கடந்த பத்து நாட்க ளாக போடியில் தங்கியிருந்துள்ளார். சனிக்கிழமை இரவு முத்துலட்சுமியின் துணிக்கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார் பெருமாயி. போடி பாஸ்கரா திருமண மண்டபம் அருகே நடந்து சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெரு மாயி அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மூன்று பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பெருமாயி போடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி நகைபறித்தவர்களை தேடி வருகின்றனர் காவல்துறை யினர்.
தோட்டத்தில் மயங்கி விழுந்த பெண் மரணம்
தேனி, ஜூலை 3- போடியில் தோட்டத்தில் மயங்கி விழுந்து பெண் இறந் தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆண்டிசாமி மனைவி முருகேஸ்வரி (51). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகனும் விபத்தில் இறந்துவிட்டார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டும், வலிப்பு நோயால் அவ திப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் முருகேஸ்வரி தமது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் முருகேஸ்வரியின் மகள் மணிமாலா (35) செல்லிடப்பேசி மூலம் முருகேஸ்வரியுடன் பேசப் பல முறை தொடர்பு கொண்டுள்ளார். அழைப்பு மணி சத்தம் கேட்டும் முருகேஸ்வரி செல்லிடபேசியில் தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த மணிமாலா தோட்டத் திற்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு முருகேஸ்வரி மயங்கிக் கிடந்துள்ளார். அவரை போடி அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது முரு கேஸ்வரி ஏற்கனவே இறந்து போனது தெரிந்தது.
புதிய மின்திட்ட மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு
விருதுநகர், ஜூலை 3- விருதுநகர் மின் திட்ட மேற்பார்வையாளராக லதா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே அருப்புக்கோட்டை வட்டச் செயற்பொறியாளராக பணி புரிந்து வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று விருது நகர் மின் திட்ட மேற்பார்வையாளராகப் பொறுப் பேற்றார். அவருக்கு அனைத்து தொழிற் சங்கத்தினர் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தொண்டி ஆரம்பசுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்தக்கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு
மதுரை, ஜூலை 3- இராமநாதபுர மாவட்டம் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த உத்தரவிடக்கோரிய வழக்கில். மனித நேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர் கலந்தார் ஆஷிக் அஹமது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைகள் தாக்கல் செய்த பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினம்தோறும் நூற்றுக்கணக் கான மக்கள் புற நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொண்டியைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளன. இவர்கள் சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனையைச் சார்ந்துள்ளனர்.
கிழக்குக் கடற் கரைச் சாலைக்கு அருகே சுகாதார நிலை யம் உள்ளதால் விபத்துகளில் பாதிக்கப்படு வோருக்கு இங்கு தான் முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர் உயரிய மருத்துவ வசதி இல்லாததால் முதலுதவி சிகிச்சைக்குப் பின் 50 கி.மீ தொலைவில் உள்ள இராமநாத புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனவே தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது அந்த வழக்கில், அரசு விரைவில் தொண்டி அரசு மருத்துவமனை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தும் என உறுதியளிக்கப்பட்டது.. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது ஆனால் இதுவரை தொண்டி மருத்துவமனை அரசு மருத்துவ மனையாகத் தரம் உயர்த்தப்படவில்லை. தொண்டி ஆரம்பச்சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த உத்தரவிட வேண்டுமெனக் கூறியிருந்தார் இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், பரத் சக்கரவர்த்தி அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஏற்கனவே அரசுத் தரப்பில் அரசு மருத்துவமனையாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 6-ஆம் தேதி அரசுத் தரப்பு பதில ளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை யை ஒத்திவைத்தனர்.