districts

img

மஞ்சாலுமூடு தோழர் பாலன் மறைவு : சிபிஎம் அஞ்சலி

அருமனை, மே 16- கன்னியாகுமரி மாவட்டம் மேல் புறம் வட்டாரம் இடைக்கோடு மஞ்சாலு மூடு பகுதியை சேர்ந்த தோழர் பாலன் என்ற பாலச்சந்தி ரன் (70) மே 15 புதன்கிழமை இரவு காலமானார். தோழர் பாலன் சிறுவயதில் இருந்து கம்யூனிஸ்ட் இயக் கத்தின் மீது பற்று கொண்டவர். எஸ்ஒய்எப் முக்கிய செயல் பாட்டாளராக சமூகப்பணி துவங்கி கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நீண்ட காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மஞ்சாலுமூடு கிளைச் செயலாளராக செயல்பட்டார், கலை - இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவர் மஞ்சாலுமூட்டில் செயல்பட்ட கலை மன்றங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித் துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு  தரமான சிகிச்சை கிடைப்பதற்காக திருவனந்தபுரம் மருத்துவ கல் லூரி மருத்துவமனைக்கும் / தேவையின் பேரில் மருத்து வர்களின் வீட்டிலும் அழைத்து செல்வது முக்கிய சேவையாக செய்து வந்தார். அதன்படி நூற்றுக் கணக்கான மருத்துவர்களை தனது நட்பு வளையத்திற்குள் வைத்திருந்தார். மெடிக்கல் காலேஜ் பாலன் அவருடைய மருத்துவ உதவி கிடைக்காத வீடுகள் அரிதே என்று கூறுவது மிகையாகாது.இவரை சாதாரணமாக பாலன் தோழர் என்று கேட்டால் சீக்கிரம் யாருக்கும் தெரிவதில்லை மெடிக் கல் காலேஜ் பாலன் என்று கேட்டால் அனைவருக்கும் தெரியும்  இப்படி மக்கள் சேவையில் கடைசி மூச்சு வரை செயல்பட்டவர் தோழர் பாலன். விவசாய சங்கத்திலும் பணி யாற்றியிருந்த தோழர் மஞ்சாலு மூடு ஊராட்சி நூலகராகவும்  மஞ்சாலுமூடு முத்தாரம்மன் ஆலய கமிட்டி தலைவராகவும் செயல்பட்டிருந்தார். இவரின் இறப்புச் செய்தியை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். செல்ல சுவாமி கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இரங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மஞ் சாலுமூடு ஏ கிளை செயலாளர் முரளி தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆர். லீமாறோஸ்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.ஆர்.சேகர், எம்.அண்ணா துரை, ஏ.வி. பெல்லார்மின், மூத்த  தோழர்கள் என் .ராமச்சந்திரன், கே. மாதவன், மாவட்டக்குழு உறுப்பி னர் எச் ராஜா தாஸ்,களியல் வட்டா ரச் செயலாளர் பி சசிகுமார் மற்றும் பாகோடு பேரூராட்சி தலைவரும் வட்டாரச் செயலாளருமான ஆர்.ஜெயராஜ், மருதங்கோடு ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மஞ்சாலு மூடு ஊராட்சி தலைவர் தீபா, முழுக்கோடு ஊராட்சி தலைவர் மரிய செல்வி விலாசினி, கடையால் பேரூராட்சி தலைவர் ஜூலியட் உட்பட ஏராள மான மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னார்கள்.

;