districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

சின்னாளப்பட்டி, அக்.1-  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலை  பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக 40 ஆண்டுகாலம் பணிபுரிந்தவர்  வீரம்மாள். இவர் சிஐடியு  சங்கத்தில்  உள்ளார். இவர் வெள்ளியன்று பணி நிறைவு பெற் றார். இதனை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டு விழாவில்  சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வி.கே.முருகன் மற்றும் நிர்வாகிகள் ரஜினி செல்வம், முருகேசன், திரு மலைச்சாமி, அழகர், சக்திவேல் மற்றும் சங்கத்தினர்   இவருக்கு மோதிரம் பரிசாக வழங்கி சால்வை அணி வித்து கௌரவித்தனர்.   இதில்  செயல் அலுவலர் நந்த குமார், தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர்  ஆனந்தி பாரதிராஜா ,தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.