districts

img

குருவிக்காரன் சாலை பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ஆணையாளர் தகவல்

மதுரை, டிச.22- மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே செல்லும் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் இறுதி கட்டப் பணிகளை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் டிசம்பர் 21 அன்று ஆய்வு மேற்கொண்டார்.  மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் நகரில் மையப் பகுதிக்குள் வெளியூர் செல்லும் பேருந்துகள் அதிகளவில் வந்து செல்வதாலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கும் பணி கள் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தில் மழைநீர் வடிகால், நடை பாதை, தடுப்புகம்பிகள், மின்விளக்குகள், தடுப்புச்சுவர்; உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று தற்போது இறுதி கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பண்டிகை காலத்திற்கு முன்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.  இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் அரசு, உதவி செயற்பொறி யாளர் சேகர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.