திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற பல்கலைக்கழகத்தின் வேந்தராக டாக்டர்.கே.எம்.அண்ணாமலைக்கு அடுத்த 5 ஆண்டுகாலத்திற்கு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பட்டம்புதூர் அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு விருதுநகர், செப்.7- விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு கள், கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் ஆய்வு செய்தார். பின்பு, கண்மணி திட்டத்தில் பயன்பெறும் குழந்தை களின் வீட்டிற்கு நேரில் சென்று குழந்தையின் ஆரோக்கிய நிலை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குழந்தை உண்ணும் முறை பற்றி யும் கேட்டறிந்தார். குழந்தைகள் ஆரோக்கியம் மேம்பட அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து காய்கறி தோட்டம் அமைப்பதற்கு விதைகள் தொகுப்பு, பப்பாளி மற்றும் முருங்கை செடிகளை குழந்தைகள் மையத்திற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்டராமன், துணை இயக்குநர் (தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை) இராதாகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் ராஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.