districts

img

சுருளி சாரல் விழா முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு

தேனி, ஜூலை 29- சுருளி அருவியில், சுருளி சாரல் திரு விழா 2023 நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து தேனி  ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா ஆய்வு செய்தார்.  மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்று லாத்துறை இணைந்து சுருளி அருவியில் இந்த ஆண்டு சாரல் திருவிழாவினை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. சாரல் திருவிழா முன்னேற்பாடு பணி கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்ட  மாவட்ட ஆட்சியர், மேடை அமையுள்ள இடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்  களை உள்ளாட்சி அமைப்பினர் விரைந்து சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும்,  வனத்துறையினர் தேவையான ஒத்து ழைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். முன்னதாக 13 வது உலக புலிகள் தின  விழாவை கொண்டாடும் விதமாக சுருளி அருவி பகுதியில் கட்டப்பட்டுள்ள இரண்டு  சுற்றுச்சூழல் அங்காடிகளை மாவட்ட ஆட்சி யர் வைத்தார்.  ஆய்வின் போது, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேக மலை புலிகள் காப்பக துணை இயக்கு னர் எஸ்.ஆனந்த், மாவட்ட வன அலு வலர் சமர்த்தா, ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குனர் இந்துமதி, உத்தம பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால் பாண்டி,சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவர்கள் உடனிருந்தனர்.