districts

img

குமரியில் சிஐடியு மாநில மாநாடு: வரவேற்புக்குழு அலுவலகம் திறப்பு

நாகர்கோவில், அக்.11- குமரியில் வரும் நவம்பர் 4,5,6 தேதிகளில் நடைபெற உள்ள சிஐடியு தமிழ்நாடு மாநில 15 ஆவது மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகம் நாகர்கோவிலில் அக்டோபர் 11 செவ்வாயன்று திறக்கப்பட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்கான போராட்டத்தில் முத்திரை பதித்துள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தமிழ்நாடு மாநில மாநாடு நவம்பர் 4,5,6 தேதிகளில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதில் இருந்தும் 700 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதையொட்டி நவம்பர் 6 ஆம் தேதி நாகர்கோவிலில் லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்கும் பேரணியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத்தை மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வரவேற்புக்குழு தலைவர் செலஸ்டின் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரன், கட்டுமான சங்க மாநில தலைவர் கே.பி.பெருமாள், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.உசேன், என்.எஸ்.கண்ணன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்றனர்.