இராமநாதபுரம்,அக்16- உப்பு நிறுவன தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத்த அறிவிப்பை முடிவுக்கு கொண்டுவர உப்பள தொழி லாளர்களை அழைத்துப் பேசி ஊதிய உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலாண்மை இயக்கு னருக்கு சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இராமநாதபுரம் மாவட்டம் வாலி நோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. உப்பு நிறுவன தொழிலாளிகளுக்கு மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது இதுவரை நடை முறையில் இருந்து வந்தது. கடந்த எட்டு ஆண்டுகளாக புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து சிஐடியு தொழிற்சங்கம் பல போராட்டங்களை நடத்தி வந்தது. போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என் கிற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வது என்று முடி வெடுத்து, கடந்த ஒரு வருடத்திற்கு (22. 09.2021)முன்பாக தொழிலாளர் நலத் துறை உள்ளிட்ட அனைத்து அரசு நிர்வா கத்திற்கும் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இராமநாதபுரத்தில் தொழிலாளர் உதவி ஆணையாளர் ( சமரசம்) முன்னி லையில் விசாரணை நடைபெற்ற போது நிர்வாகம் தரப்பில் கலந்து கொண்ட அதி காரிகள், ஊதிய உயர்வு தருகிறோம். ஒப்பந்தம் ஏற்படுத்தலாம் என்று உறுதி யளித்ததை தொடர்ந்து தொழிற்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மற்றும் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒத்தி வைக்கப்பட்டு. ஒப்பந்தம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற மனு சமர்ப்பிக்கப் பட்டது. இந்த சூழ்நிலையில் அலுவலகம் மதுரைக்கு மாற்றப்பட்டது. மதுரையில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சம ரசம்) முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒரு மாத காலத்திற்குள் ஊதிய உயர்வு தருவதாக மேலாண்மை இயக்குனரிடமிருந்து எழுத்துப்பூர்வ மான கடிதம் தொழிற்சங்கத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் சென்னையில் வந்து மேலா ண்மை இயக்குனரை சந்திக்குமாறு தொழிற்சங்கத்திற்கு அழைப்பு விடுக் கப்பட்டது. சென்னை சென்று தொழிற்சங்க தரப்பினரும், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் உள் ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க தரப்பில் குறைந்தபட்ச ஊதியத்தை விட அனைவருக்கும் ரூ.50 கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதி யம் என்பது பணியில் சேர்ந்த அன் றைக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டம் என்பதை தொழிற்சங்க தரப்பில் விளக்கி கூறப்பட்டது.
இதனை காதுகொடுத்து கேட்ட மேளாண்மை இயக்குனர் மற்றும் உப்பு நிறுவன அதிகாரிகள் நிச்சயமாக உங்க ளுக்கு ஊதிய உயர்வு தருகிறோம். ஒரு மாதம் பொறுத்திருங்கள். போர்டு மீட்டிங்கில் அனுமதி பெற்று உங்களுக்கு ஊதிய உயர்வு நிச்சயம் தருகிறோம் என்று நம்பிக்கையோடு அனுப்பி வைத்தனர். மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தொழிலாளர் உதவி ஆணை யாளர் முன்பு 13.10.2022 அன்று நடை பெற்ற பேச்சு வார்த்தையில் ஊதிய உயர்வு வழங்க வாய்ப்பில்லை என்று எழுத்துப்பூர்வமான அறிவிப்பை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது தொழிலா ளர்கள் மத்தியில் அதிர்ச்சியும், வேத னையும் உருவாக்கியது. ஊதிய உயர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த தொழி லாளர்களை நம்பிக்கை மோசடி செய் யும் அறிவிப்பாக அமைந்தது. வேளாண்மை இயக்குனரின் இந்த அடாவடித்தனமான அறிவிப்பானது தொழிலாளர்கள் மத்தியில் கடும் கோபத்தையும், அதிருப்தியையும் உரு வாக்கியது.
எட்டு ஆண்டுகள் வழங்கப்படாத ஊதிய உயர்வை தொழிற்சங்கங்களை அழைத்து பேசி அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 17.10.22 முதல் ஊதிய உயர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தை உப்பு நிறுவன உப்புத் தொழிலாளர் சங்கம் சிஐடியு நடத்துவது என்று முடிவு செய்துள்ளது. இந்த வேலை நிறுத்தமானது தொழி லாளர்கள் மீது நிர்வாகம் திணித்த வேலை நிறுத்தம் ஆகும். தொழிலா ளர்களை நம்பிக்கை மோசடி செய்த தால் தொழிலாளர்கள் நடத்துகின்ற போராட்டமாகும். தமிழக அரசும்,உப்பு நிறுவன நிர்வா கமும் உடனடியாக தலையிட்டு தொழி லாளர்கள் 8 ஆண்டு காலமாக கேட்டு வந்த ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற மேலாண்மை இயக்குனர் முன்வர வேண்டும். வேலை நிறுத்த அறிவிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.