districts

img

துப்புரவுப் பணியை தனியாருக்கு விடுவதை கண்டித்து சிஐடியு போராட்டம்

விருதுநகர், நவ.30- தமிழக அரசு, சுகாதாரப் பணிகள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான அரசு உத்த ரவை உடனே ரத்து செய்ய வேண்டும். விருதுநகர் நக ராட்சியில் மாவட்ட ஆட்சிய ரின் உத்தரவுப்படி தினக் கூலி அடிப்படையில் பணி புரிந்து வரும் துப்புரவு பணி யாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.458 வழங்கக் கோரியும் சிஐடியு-ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு எம்.பாண்டி தலைமை யேற்றார். துவக்கி வைத்து ஆர்.விஜயபாண்டி பேசி னார். போராட்டத்தை ஆத ரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர் செய லாளர் எல்.முருகன் பேசி னார். முடிவில் மாவட்டச் செயலாளர் ஆர்.பால சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார்.மேலும் இதில், கே.பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.