மதுரை, அக்.6- மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஓய்வு பெற்ற நிரந்தர தொழிலா ளர்களுக்கு சேரவேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா ஊக்கத் தொகை ரூ .15 ஆயிரத்தை உடனடி யாக வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சம்பள உயர்வு ரூ .721-ஐ வழங் கிட வேண்டும். சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு ஒப்பந்த தொழி லாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதி யமான ரூ .721 -ஐ வழங்கட வேண்டும். ஒப்பந்த சுகாதாரம் மற்றும் பொறி யியல் பிரிவு தொழிலாளர்களுக்கு 11 மாத இ.பி.எப்., நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு மதுரை மாநக ராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் வியாழ னன்று அறிஞர் அண்ணா மாளிகையில் மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்றது . கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொதுச் செயலாளர் எம். பாலசுப்பிர மணியம் பேசினார் .இதில் மாவட்ட பொருளாளர் கருப்பாசாமி, செயல் தலைவர் எஸ். விஜயன், மாவட்ட துணை பொதுச் செயலாளர் ரவி, துணைத் தலைவர்கள் வி, கண்ணன், ஏ. நாச்சியப்பன், மாவட்டச் செயலா ளர்கள் ஏ. ரமேஷ், பி. வைரமணி, ஏ. சர வணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக் கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.அதனை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.