districts

img

முதுகுளத்தூரில் சிஐடியு, விவசாயிகள் சங்கம் பிரச்சாரம்

இராமநாதபுரம், மார்ச் 23- குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்  டும். ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த ஊழி யர்கள் நிரந்தரழுபடுத்தப்பட வேண்டும் . வேளாண் விளைபொருள்களுக்கு ஒன்றரை மடங்கு ஆதார விலை வேண்டும் 100 நாள் வேலை திட்டத்தை இரு நூறு நாட்களாக உயர்த்தி ரூ.600 சட்ட கூலி வழங்க  வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மய மாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்  என்று வலியுறுத்தி ஏப்ரல் 5  தில்லியில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது.  இதனை விளக்கி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத்தொழிலாளர் சங்கம்  சார்பாக நடை  பயண பிரச்சாரம் இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் தாலுகாவில் நடைபெற்றது. செல்லூர் மையத்தி லிருந்து துவங்கி செங்கப்படை சிறுதலை மற்றும் திரு வரங்கம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம். சிவாஜி,  விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் எம். முத்து ராமு ,மாவட்ட  செயலாளர் வி.மயில்வாகனன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.கணேசன் ஆகியோர் பேசி னர்.