மதுரை புறவழிச்சாலை சொக்கலிங்கநகர் அருகில் உள்ள பல்நோக்கு சேவா சங்கத்தில் கிறிஸ்துமஸ் விழா முனைவர் அந்தோனி பாப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் பாதித்தவர்களுக்கான நல உதவி திட்டம் தொடக்க விழா நடை பெற்றது. சங்கத்தின் செயலரும், பொருளாளருமான அருட்பணி கபிரியேல் வரவேற்று பேசினார். விழாவில் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள், வல்லுநர்குழு உறுப்பினர்கள், சங்கப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.