districts

img

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

திண்டுக்கல்,அக்.21- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல்  மாநாட்டிற் கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு புதனன்று பிச்சாண்டி கட்டிடத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சு.ப.இராசி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நசாருதீன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் பரமேஸ்வரி சிறப்புரையாற்றினார். மாவட்ட கவுரவத் தலைவர் எல்.ரவீந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.வளர்மதி,  முன்னாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ.மோகனா, இலக்கியக்களத்தின் செயலாளர் எஸ்.கண்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், மாநிலத் தலைவர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் கௌதமன் நன்றி கூறினார். 225-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.