districts

img

சிமெண்ட் சாலை - குடிநீர்த்தொட்டி கட்ட அடிக்கல்

சின்னாளப்பட்டி ஜூன் 8- திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி ஊராட்சியில் ரூ.22 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலை வர் பரமேஸ்வரி முருகன்  தலைமை வகித்து, பண் ணைப்பட்டி கிராமத்தில் ரூ.12.50 லட்சம் செலவில்  புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கும் கருப்பன் மூப்பன்பட்டி கிராமத்தில் ரூபாய் 9.50 செலவில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி  கட்டுவதற்கும்  அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்  விராலிப்பட்டிஒன்றிய கவுன்சிலர் விஜயகர், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக நிர்வாகிகள் நர சிம்மன், வார்டு கவுன்சிலர் முத்துப்பாண்டி, வேல்முரு கன் மற்றும் ஊர் பொதுமக் கள் கலந்து கொண்டனர்.