districts

img

கூட்டுப்பண்ணை விவசாயிகள் அமைத்துள்ள மாட்டுத்தீவனம் அரைக்கும் இயந்திரம்

தேனி, டிச.17-  ஆண்டிபட்டி அருகே மேகமலை கூட்டுப்பண்ணைய விவசாயிகள் உற் பத்தியாளர்கள் குழு மையத்தின் செயல் பாடுகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் ஆய்வு மேற் கொண்டார். தமிழ்நாடு நீடித்த நிலைக்கத்தக்க மானாவாரி மேம்பாட்டு திட்டம் 2020-21-இன் கீழ், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட பாலக்கோம்பை கிராமத்தில், மேகமலை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் குழு வின் மையத்திற்கு மாட்டுத்தீவனம் அரைக்கும் இயந்திரம், தானியங்கள் மற்றும் மிளகாய் உலர்த்தும் இயந்திரம், மாவு மற்றும் மசாலா பொடி அரவை இயந்திரம், எடை கருவி மற்றும் பேக்கிங் இயந்திரங்கள் ரூ.10 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.15.83 லட்சம் மதிப்பிலான வேளாண் மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

 இம்மையத்தின் மூலம் குழு உறுப்பினர்கள் தங்களது வாழ்வாதா ரத்தினை மேம்படுத்தி கொள்வதோடு மட்டுமல்லாமல், ஆண்டிபட்டி வட்டத் திற்குட்பட்ட பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகை யில்  செயல்பட்டு வருகிறது.   விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் அதிகரிக்கப்பதற்காகவும், மழைநீர் சேமிப்பிற்காகவும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) நிதியின் கீழ் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்ட சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் தனிநபர் விவசாய நிலத்தில் ரூ.1.00 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில், தேவைக்கேற்ப நீரினை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட வாய்ப்பு ஏற்பட்டுள் ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின் போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் அழகுநாகேந்திரன், வேளா ண்மை பொறியியல் துறை துணை இயக்குநர் சங்கர், உதவி செயற்பொறியா ளர் ராஜா, உதவிப் பொறியாளர்கள் இராமகிருஷ்ணன் மற்றும் முகுந்தன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர் கள் உடனிருந்தனர்.

;