districts

img

சின்னாளப்பட்டியில் தீப்பிடித்த எரிந்த ஏர்டெல் செல்போன் கோபுரம்

சின்னாளப்பட்டி, செப்.15-  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் காமரா ஜர் சாலையில் அதிக குடி யிருப்புகள் உள்ளன. சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வங்கி களும் அரசு உயர்நிலைப் பள்ளியும். உள்ளது. இப்பகு தியில்  கனரா பேங்க் அருகில் குடியிருப்பு பகுதியில் செல் போன் டவர் தீ பிடித்து தீய ணைப்பு துறையினர் போ ராடி தீயை அணைத்தனர். பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. செல்போன் கோபுரத்து க்கு மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அமைக்கப் பட்டு உள்ளது.  இந்த ஜென ரேட்டர் அதிக  மின்னழுத்தம் ஏற்ப்பட்டதால் தீ பற்றி எரிய தொடங்கியது. அதிகளவு மின் ஒயர்கள் உள்ளதால் தீ மளமளவென பரவியது.   இதனை பார்த்த பொது மக்கள் தங்கள் வீடுகளில் மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்தனர். மாடி வீட்டி ற்கு செல்லும் தண்ணீர் குழாயில் தீப்பிடித்து எரிந்த தால் குழாய் உடைந்து அதிலிருந்து  தண்ணீர் வெளி யேற்றது.   தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு  துறையினர் ஒரு மணி நேரத் திற்கு மேலாக போராடி  தீயை அணைத்தனர்.  குடியிருப்பு பகுதியில் உள்ள செல்போன் கோபு ரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் மாவட்ட ஆட்சிய ருக்கு கோரிக்கை விடுத்துள் ளனர்.

;