districts

img

தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், நவ.9- இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவருக்கு யுவஸ்ரீ  என்ற 10 வயது பெண் குழந்தை யும், கவி தேவநாதன் என்ற ஆறு  வயது ஆண் குழந்தையும் இருந்தனர். கடந்த 4 ஆம் தேதி இரண்டு  குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் அருகில் உள்ள பெண்  செவிலியாரிடம் ஊசி போட்டுள்ள னர். கவி தேவநாதனுக்கு ஊசி  போட்ட இடத்தில் சிறிது வீக்கம் இருந்து வலி எடுக்கவே சம்பந்த  புரத்தில் உள்ள அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் மருத்து வர் பாஸ்கரன் என்பவர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனை யில் இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்று ஊசி போட்டுள்  ளார். வீட்டிற்கு வந்தபோது  கவி தேவநாதன் வலி எடுக்கவே துவண்டு போனான்.பின்னர் மருத் துவர் பாஸ்கரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர் வந்து பார்த்துவிட்டு  இளந்தோப்பு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்  செல்லுங்கள் என்றார். அங்கு சென்று சேர்த்தபோது, குழந்தை இறந்து விட்டது என்று பரி சோதித்த மருத்துவர்கள் கூறி விட்டனர். மருத்துவர் பாஸ்கரின் அலட்சி யமான நடவடிக்கையாலும் தவ றான சிகிச்சையாலும் சிறுவன் கவி தேவநாதன் உயிரிழந்துள்ளான். எனவே சிறுவனின் இறப்பிற்கு கார ணமான டாக்டர் பாஸ்கரன் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் உயிரிழந்த குழந்தை யின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர்க்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.  நகர செய லாளர் மாரியப்பன், மாதர் சங்க நகர தலைவர் மைதிலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகர் குழு உறுப்பினர்கள் மேரி, முருகா னந்தம், செல்வராஜ், கிளைச் செய லாளர் செல்வம் மற்றும் பாதிக் கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக் கள் பங்கேற்றனர்.