சிவகங்கை, அக்.22- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்களை வாசித்து கருத்துக்களை வெளிப்படுத்திய மாணவர் களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. தேவகோட்டை ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் இதயம் நிறுவனமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர். தேவகோட்டை ரோட்டரி சங்க தலைவர் ஜோசப் செல்வ ராஜ் வரவேற்றார். ரோட்டரி கிளப் மாவட்ட துணை ஆளு நர் கணேசன் தலைமை தாங்கி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் நன்றி கூறினார். புத்தகங்கள் வழங்கி படிக்க கூறிய மாணவர்களில் சிறப்பாக தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி முதல் பரிசினை மாணவி திவ்யஸ்ரீயும், இரண்டாம் பரிசினை முத்தய்யன், மூன்றாம் பரிசு சந்தோஷ்குமாரும், நான்காம் பரிசு ஜெயஸ்ரீயும், ஐந் தாம் பரிசினை யோகேஸ்வரனும் பெற்றனர்.