தேனி, மே 7- பாரதி புத்தகாலயம் சார்பில் கம்பத்தில் அரச மரம் அருகே புத் தக திருவிழா சனிக்கிழமை துவங்கி யது. கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முதல் விற் பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வி.வெங்கட் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.ஆர்.லெனின் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பாரதி புத்தகாலய பொறுப்பாளர் சி.முனீஸ்வரன், அறிவியல் இயக்க பொறுப்பாளர் எச்.ஸ்ரீராமன், தமுஎகச மாவட்டச் செயலாளர் அய்.தமிழ்மணி, மாநி லக்குழு உறுப்பினர் சுருளிப்பட்டி சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் நாளாக ஞாயி றன்றும் விற்பனை நடைபெறு கிறது.