districts

பாஞ்சாங்குளம் பள்ளியில் “பெஞ்சு” பிரச்சனை

மதுரை, செப்.19- தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா பெருமாத்தூர் ஊராட்சிக் குப்பட்ட பாஞ்சாங்குளம் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டம் வழங்க மறுத்த கடைக்கா ரர் மகேஷ்வரன் தற்போது சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். அத்தோடு இங்குள்ள பள்ளியில் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்களை “பெஞ்சில்” அமரவைப்ப தில்லை எனக் கூறினர். மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களோ தாங்கள் “பெஞ்சில்” அமர்வ தாக ஞாயிறன்று பாஞ்சாங் குளத்திற்கு நேரடியாகச் சென்றபோது தெரிவித்தி ருந்தனர். இந்தநிலையில் “பெஞ்ச்” பிரச்சனை குறித்து தென்காசி மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் கபீர் திங்களன்று ஆய்வு செய்தார். அவரைத் தொ டர்பு கொண்டு விபரங்கள் பெறமுயன்றபோது அவர் மாவட்ட ஆட்சியருடன் ஒரு கூட்டத்தில் இருப்பதாகக் கூறினார். அதிகாரி நடத்திய ஆய்வு குறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பள்ளிக்கூடத்தில் “பெஞ்ச்” இல்லை. ஆனால், எண்ணும் எழுத்தும் திட்டத் தின் கீழ் மூன்று மேசை உள்ளது. அந்த மேசை எண்ணும் எழுத்தும் திட்ட மாணவர்கள் பயன்படுத்து கிறார்கள். பாஞ்சாங்குளம் பள்ளி க்கு விரைவில் பெஞ்ச் வழங்கப்படும். 23 மாணவர் கள் படிப்பதால் குறைந் தது ஆறு பெஞ்ச்களாவது தேவை. மூன்றுக்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் கொண்டுபோய் வைத்தபின் அதனால் சிரமம் வந்துவிடக் கூடாது. மொத்த எண்ணிக் கையிலான பெஞ்ச்கள் கிடைத்ததும் பள்ளிக்கு வழங்கப்படும் என்றனர்.

;