விருதுநகர், ஜூன்.30- விருதுநகர் நகராட்சி பகுதி யில் சாலையோரங்களில் புதிய குழாய் பதிக்கும் பணியை குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்து வரு கின்றனர்.அப்போது, ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்கள் சேதம டைந்தால் அதை சீரமைப்ப தில்லை. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் சரமாரி யாக புகார் தெரிவித்தனர். விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் ஆர்.மாதவன் தலைமை யில் நடைபெற்றது. ஆணையாளர் லீனாசைமன், பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்த னர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு : தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் 2 ஆவது பணிகள் நகரில் நடைபெறுகிறது. மதுரா கோட்ஸ் காலனியில் ஏற்கனவே இருந்த குழாய்களை குடிநீர் வடிகால் வாரி யத்தினர் உடைத்து விட்டனர். ஆனால் உங்களிடம் தெரிவித்தும் சீரமைக்கவில்லை. மாறாக கூடுதலாக 2 இடத்தில் உடைத்து விட்டனர் என உறுப்பினர் முத்து ராமன் புகார் தெரிவித்தார். இதேபோல் கிருஷ்ணமாச்சாரி சாலையில் பொது குடிநீர் குழாயை உடைத்துவிட்டு சீர் செய்ய வில்லை. மேலும், குழாய் பதித்த இடங்களை சரியாக மூடாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என சிபிஎம் உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார். குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தக்காரர்கள் குழாய்களை சேதப்படுத்தி விடுகின்றனர். சரி செய்வதற்காக போன் செய்தால் எடுக்க மறுக்கின்றர் என உறுப் பினர் கலையரசன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலை வர், இனி சேதமடையும் குழாய் களை உடனுக்குடள் சீரமைக்க வலி யுறுத்தப்படும் என தெரிவித்தார்.
இறந்த உதவியாளருக்கான பணத்தை பங்கு போட்ட அலுவலர்
நகராட்சியில் பணியில் இருக்கும் போது இறந்த உதவியா ளர் ஒருவர் ஏற்கனவே தேர்தல் பணி செய்துள்ளார். அதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த பணத்தை அவரு டைய குடும்பத்தாரிடம் வழங்கா மல் நகராட்சி காசாளர் மற்றும் ஊழி யர்கள் சேர்ந்து பிரித்து வைத்துக் கொண்டுள்ளனர். இது நியாயமா? பிணந்திண்ணி கழுகுகளா இவர்கள்? என உறுப்பினர் ராஜ் குமார் ஆவேசமாக பேசினார். கூட்டம் முடிவடைந்ததும் ஆணையாளரிடம் பேசி பிரச்ச னையை தீர்ப்போம் என தலைவர் தெரிவித்தார். துப்புரவுத்தொழிலாளர் குடியி ருப்பில் பாம்புகள் படையெடுக்கின் றன. அதை தடுக்க சுற்றுச் சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய வேண்டுமென பலமுறை கூட்டத்தில் தெரிவித்தும் உரிய நட வடிக்கை இல்லையென உறுப்பி னர் மதியழகன் தெரிவித்தார். நமக்கு நாமே திட்டத்தில் சூரிய ஒளி மின் சக்தியுடன் போடப்பட்ட எல்.இ.டி விளக்குகள் தரமற்றவை யாக உள்ளது. நாம் கொடுத்த விலைக்கு ஏற்ற விளக்கு இல்லை. மிகக் குறைந்த வெளிச்சம் தான் வருகிறது. கிராமப் பகுதி மற்றும் 4 வழிச் சாலைகளில் பொருத்தி யுள்ள சூரிய ஒளி எல்.இ.டி விளக்கு கள் நல்ல வெளிச்சமுள்ளதாக உள்ளது. கடந்த காலங்களில் நூற்றாண்டு விழா திட்டத்தில் எல். இ.டி விளக்குகள் பொருத்தியதில் ஊழல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே, அதேநிலை தற்போதும் வர வேண்டாம். வெளிச்சம் அதிக மாக கிடைக்கும் விளக்குகளை பொருத்துங்கள். அல்லது இந்த தீர்மானத்தை ரத்து செய்யுங்கள் என சிபிஎம் உறுப்பினர் ஜெயக் குமார் தெரிவித்தார்.
இதையடுத்து, உறுப்பினர் கலையரசன், முத்துராமன், முத்து லெட்சுமி ஆகியோர் இதே கருத்தை வலியுறுத்தினர். பின்பு பேசிய தலைவர், அதில் கூடுதலான விளக்குகள் பொருத்தி வெளிச்சம் அதிகமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரி வித்தார். ஆட்டுச் சந்தை 5 முறை ஏலம் விடப்பட்டுள்ளது. சமீபத்திலும் ஏலம் விடப்பட்டுள்ளது. ஆனால், மன்றத்தில் பொருள் வரவில்லை. ஏன்? நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என உறுப்பினர் ஆறுமுகம் கேள்வி எழுப்பினார். தற்போது தான் ஆணையாளர் வந்துள்ளார். எனவே, அடுத்த கூட்டத்தில் பொருள் கொண்டு வரப்படும் என தலைவர் தெரி வித்தார். புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் மூடல் புதிய பேருந்து நிலையத் திற்கு தினசரி 4 தொலைதூரப் பேருந்துகள் வருகிறது. அங்கு கழிப்பறை பூட்டியுள்ளது. இத னால் அங்கு வரும் பெண் பய ணிகள் மிகவும் சிரப்படுகின்றனர் என உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார். உடனடியாக கழிப்பறையை திறக்க ஏற்பாடு செய்யப்படும் என தலைவர் பதில் கூறினார். இந்திரா நகர் பகுதியில் 1 மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங் கப்பட்டது. எனவே, கூடுதலாக ஒரு மணி நேரம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென உறுப்பினர் ராமச்சந்திரன் தெரிவித்தார். உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் அஹமது நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் வரும் பகுதிகளை ஆய்வு செய்கிறேன் என தலைவர் தெரிவித்தார். இவ்வாறாக விவாதம் நடை பெற்றது.