districts

மதுரை கைலாசபுரத்தில் படிப்பகம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

மதுரை, டிச.3-  மதுரை கைலாசபுரம் பகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான படிப்ப கத்தை இடித்த மாநகராட்சி நிர்வா கத்தைக் கண்டித்து டிசம்பர் 2 வியா ழனன்று கட்சியினர் அருள்தாஸ் புரத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு - 1 ஆம் பகுதி குழுவிற்கு உட்பட்ட 9வது வார்டு கைலாசபுரம் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு பயன்பட்டு வந்த தோழர் ஏ. பி. பழனிச்சாமி படிப்பக இடத்திற்கு போதிய ஆவணங்கள் இருந்தும் அதை ஆய்வு செய்யாமல் மாந கராட்சி நிர்வாகம் அராஜகமாக இடித்தது.  இதனைக் கண்டித்து நடை பெற்ற போராட்டத்திற்கு கட்சி யின் பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன் துவக்கி வைத்துப் பேசினார்.

மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வசந்தன், அ. ரமேஷ், இரா. லெனின், வை.ஸ்டா லின், ஜெ.லெனின், டி.செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர்கள்  கே. அலாவுதீன், ஏ.பாலு, கு. கணேசன், டி.குமரவேல், ஏ. பாண்டி, ஏ.பி.சிவராமன், டி.நாக ராஜ், வேல்தேவா, முன்னாள் கவுன்சிலர்கள் பா.பழனியம் மாள், க.திலகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  இதன்பின்னர் அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, படிப்பகத்திற்கான இடத்தை அள வீடு செய்து கொடுக்க வேண்டும் என ஏற்கனவே மாநகராட்சி அதி காரி மற்றும் மாவட்ட நிர்வாகத்தி டம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் படிப்ப கத்திற்கு உரிய இடத்தை அளவீடு செய்து மீண்டும் படிப்பகத்தை சீர மைத்துக் கொடுக்க வேண்டும். மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலி யுறுத்தினர்.  டிசம்பர் 3 வெள்ளியன்று படிப்பக இடத்தை அளவீடு செய்து தருவதாக உதவி வரு வாய் அலுவலர் உறுதியளித் தார். படிப்பக இடத்தில் ஊன்றப் பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றி, சீரமைத்து தருவதாகவும் அதி காரிகள் உறுதியளித்தனர்.

;