districts

img

வீரபாண்டியன் மீது தாக்குதல்: சிபிஐ ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.5- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பி னர் எம்.வீரபாண்டியன் சமூக விரோதிகளால் தாக்கப்  பட்டதை கண்டித்தும், சமூக விரோதிகள் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம்  இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி, அரசரடி பகுதி களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னரும் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான லிங்கம் தலைமை வகித்தார். இதில் கணேசமூர்த்தி, வழக்கறிஞர் பகத்சிங், வரதராஜன், சேத்தூர் நகரச் செய லாளர் ராஜா, அய்யணன்,  மாயாண்டி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.  திருவில்லிபுத்தூர் நகரச் செயலாளர் மூர்த்தி தலைமை யில் பேருந்து நிலையம் முன்பாகவும், வத்திராயிருப்பி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.