தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை
தருமபுரி, டிச.17- கூலி தொழிலாளி சாதியை இழிவுபடுத்தி, கொலைவெறி தாக் குதல் நடத்தியவர்கள் மீது வன் கொடுமை சட்டத்தின் கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், செம்பட்டி காந்திநகர் கிரா மத்தை சேர்ந்தவர் பெரிய சென்னப் பனின் மகன் சென்னப்பன் (35). இருளர் சமூகத்தை சேர்ந்த கூலி தொழிலாளி. சென்னப்பனுக்கு முனியம்மாள் என்ற வாய் பேச முடி யாத மாற்றுத்திறனாளி மனைவி யும், சக்கரசெட்டி (4) ஒரு ஆண் குழந்தையும், சுதார்ஷினி (2) ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சென்னப்பன் கடந்த டிச.6 தேதியன்று இரவு சுமார் 7 மணியளவில், இவருக்கு சொந்தமான நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலை யில், அதனை பிடித்து வர சென் றார். அப்போது, இக்கிராமத்தில் உள்ள ஆதிக்க சமூகத் சேர்ந்த வக்கீல் (எ) கோவிந்தராஜ் என் பவர் நிலத்தில் சட்டவிரோதமாக அமைத்துள்ள மின் வேலியில் சென்னப்பன் தெரியாமல் காலை வைத்துவிட்டார். அதனால் மின் சாரம் தாக்கியதில் அலறி உள்ளார். இந்த அலறால் சப்தம் கேட்டு வந்த வக்கீல் (எ) கோவிந்தராஜ், கிருஷ்ணன், கிருஷ்ணன் (எ) கரியப்பன் ஆகியோர் சென்னப் பனை மாட்டுகொட்டைக்கு தூக்கி சென்றனர். பின்னர், தகாத வார்த் தைகள் கூறியும், சாதியை குறிப் பிட்டு பேசியும், மின்சாரம் தாக் கியது குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்றனர். மேலும், அவ் வாறு கூறினால், உன்னையும் உனது குடும்பத்தினரையும் கொலை செய்யாமல் விட மாட்டேன் என்றும் கூறி சென்னப்ப னுக்கு கொலை மிரட்டல் விடுத்துள் ளனர்.
ஆனால், நடந்த சம்பவத்தை ஊர் மக்களிடம் கூறுவதாக சென் னப்பன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும், சென்னப்பனை கொடூரமாக தாக்கி உள்ளனர். இவர்கள் தாக்கியதில் சென்னப்பனுக்கு தோள்பட்டை, முதுகு தண்டுவடம் மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால்,சென்னப்பன் மயக்க நிலையில் இருந்ததால் இறந்து விட்டதாக கருதி அங்கன்வாடி மையத்தின் அருகில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதையறிந்த உறவினர்கள் சென்னப்பனை மீட்டு பெல்ரம்பட்டி அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, தற்பொழுது வரை சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிகிச்சை பெற்றுவரும் சென் னப்பனிடம், மாரண்ட அள்ளி போலீ சார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சென்னப்பனால் சரிவர பேச முடியாததால்் நடந்த வற்றை முழுமையாக சொல்ல முடியவில்லை. இதனால் மாரண்ட அள்ளி போலீசார், வாய்த்தகராறு என்று ஒரு சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளனர். சென்னப்பன் இருளர் சமூகம் என்பதால் கொலை செய்தாலும் யாரும் வரமாட்டார்கள் என்ற நோக்கத்துடன் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, சென்னப்பனை தாக்கிய கோவிந்தராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கொலை முயற்சி, சாதியை சொல்லி இழிவுபடுத்தி வன்செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆதலால், எஸ்சி/எஸ்டி, வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.