கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகில் உள்ள அண்டூர் புல்லை பகுதியைச் சேர்ந்த ராணவ வீரர் கிருஷ்ணபிரசாம் காஷ்மீர் எல்லையில் பணியின்போது மரணமடைந்தார். அவரது உடல் சனிக்கிழமையன்று (டிச.11) காலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.