சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரளிக்கோட்டை, வடுவன்பட்டி, முதலியான்பட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் , பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர்கள் செல்லத்துரை (திருப்பத்தூர்), முருகையா (சிவகங்கை) சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் கே.புவனேஷ்வரி (அரளிக்கோட்டை), சசிக்குமார் (வடுவன்பட்டி), தமுத்துராமன் (முதலியான்பட்டி), மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.