அருமனை, மே.16 - கன்னியாகுமரி மாவட் டம் மேல்புறம் செம்மங் காலை பகுதியை சேர்ந்தவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் எஸ் .தங்கப்பன். இவரது பேத்தியும் ஜீவா வின் மகளுமான அஸ்லின் திஸ்யா மார்த்தாண்டம் தனியார் பள்ளியில் படித்து வந்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 593 மதிப் பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அஸ்லின் திஸ்யா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்புறம் வட்டார குழு சார்பாக இவரது இல் லத்திற்கு சென்று பொன் னாடை போர்த்தி பரிசுப் பொருட்கள் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் பாகோடு பேரூராட்சித் தலை வரும் மேல்புறம் வட்டாரச் செயலாளருமான ஆர்.ஜெய ராஜ், விவசாய சங்கத்தின் வட்டார செயலாளர் டி.வின் சென்ட், வட்டாரக்குழு உறுப்பினர்கள் ஹென்றி, கிறிஸ்துதாஸ், கிறிஸ்டோ பர் உட்பட பலர் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.