திண்டுக்கல், ஜுன் 13- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விருவீடு அருகே உள்ளது குன்னத்துப்பட்டி. இக்கிரா மத்தில் கல்குவாரிக்கு அனுமதி பெற்ற சாதி ஆதிக்கச் சக்தியினர் அப்பகுதியில் உள்ள அருந்ததியர் மக்களை வெளியேற்றுவதற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.இதற்கு கண் டனம் தெரிவித்து செவ்வாயன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் அருந்ததிய மக்கள் ஈடுபட்ட னர். இந்த கிராமத்தில் அருந்ததியர் சமூ கத்தைச் சேர்ந்த 10 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வரும் இந்த மக்கள் அதே பகுதியில் ஆண்டாண்டுகளாக விவசாயம் செய்து வரு கிறார்கள். இந்த மக்கள் வசிக்கும் பகுதியில் தற்போது கல்குவாரி அமைப்பதற்கான அனு மதியை நிலக்கோட்டை வட்டாட்சியர் அலு வலகம் வழங்கி உள்ளது .அனுமதி பெற்ற கல் குவாரி ஒப்பந்ததாரர் தற்போது அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களை வெளியேற் றம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் பொதுச் செய லாளர் விஸ்வேஷ்குமார் தலைமையில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர் பின்னர் விஸ்வேஷ்குமார் மற்றும் அவர் கட்சியின் நிர்வாகிகள் திண்டுக்கல் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உட னடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த ஊரில் கல்குவாரி வருவதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக வட்டாட்சியரிடம் கேட்ட போது எந்த கல்குவாரிக்கும் அனுமதி வழங்க வில்லை என்று கூறினார். இந்நிலையில் செல் வம் என்பவரும் அவரது நண்பர்களும் குன் னத்துப்பட்டி மக்களை அங்கிருந்து வெளி யேற வேண்டும் என்று மிரட்டி வருகின்ற னர்.
காவல் அதிகாரிகள் முன்பு மிரட்டல்
ரவிக்குமார் என்பவரும் இந்த பகுதியில் கல்குவாரி அனுமதி பெற்றுள்ளதாகவும் அதற்காக ரூ.50 லட்சம் வரை செலவு செய் துள்ளதாகவும் கூறி இப்பகுதி அருந்ததியர் மக்களிடம் தகராறு செய்துள்ளார்.இது தொடர்பாக விருவீடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரத் தில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று ரவிக்குமார் உள்ளிட்ட பலர் காவல்நிலை யத்தில் வைத்து மிரட்டி உள்ளார்.கடந்த 3 தலைமுறைகளாக இப்பகுதியில் மானா வாரி விவசாயம் செய்து வருகிறார்கள். குடி யிருப்பதற்காக இந்த மக்கள் தொடர்ந்து மனு கொடுத்தும் அதிகாரிகள் பட்டா வழங்கா மல் இழுத்தடித்து உள்ளனர். புல எண். 79ல் 2.65.00 ஹெக்டேர் மற்றும் புல எண் 80ல்; 2.46.00 ஹெக்டேர் நிலம் உள்ளது. மனுதாரர்களாக சின்னப்பாண்டி, பாண்டி, முருகன், கருப்புசாமி ஆகியோர் அவரை, அகத்தி, முருங்கை, ஆகியவை பயிரிட்டு விவசாயம் செய்து வருவதாக வட்டாட்சியரிடம் கடந்தாண்டு நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்துள்ளனர். ரவிக்குமார் சாதி ஆதிக்க நபர் ஆவார். இவர் அருந்ததிய தலித் மக்களை மிரட்டி அந்த நிலங்களை பறிப்பதற்கான முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அரசு அதி காரிகள், காவல்துறை அதிகாரிகள் அனை வரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்ப தாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
மனுவை தள்ளுபடி செய்த வட்டாட்சியர்
சின்னப்பாண்டி, பாண்டி, முருகன், கருப்பசாமி உள்ளிட்ட 10 குடும்பத்தினர் கொடுத்த புகார் மனுவின் மீது நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஸ்கோடி கடந்த ஆண்டில் விசாரணை செய்ததில் அருந்ததியர் நிலங் களை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் கிரஷர் அமைக்க டெண்டர் எடுத்துள் ளதாகவும் அதற்கான பணிகள் எதுவும் மேற் கொள்ளவில்லை என்றும் மனுவை தள்ளு படி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலை யில் இந்த நிலத்தில் கிரஷர் அமைக்க அரசு அனுமதி கொடுத்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி யில்லை என்று ஆட்சியருக்கு 2021ம் ஆண்டு சின்னப்பாண்டி கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் அன்றைக்கிருந்த ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து சாதி ஆதிக்க சக்தியினர் மிரட்டல் விடுத்து வண்ணம் உள்ளனர்.
அனைத்து கட்சிகளை திரட்டி போராடுவோம்
ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் விஸ்வேஸ்குமார் தலைமை யில் செவ்வாயன்று ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் கனிமவளத்துறை அதி காரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். மனு வை பெற்றுக்கொண்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், கோட்டாட்சியரைக் கொண்டு விசாரிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிவித்தார். கனிம வளத்துறை அதிகாரிகள் குன்னத்துப்பட்டி யில் நேரில் ஆய்வு மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய விஸ்வேஸ்குமார், அருந்ததிய மக்களை அங்கிருந்து கல்குவாரிக்காக அப்பு றப்படுத்த முயன்றால் அனைத்து கட்சிகளு டன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டி வரும் என்று தெரிவித்தார்.